இந்தியா நட்புல கை வச்சா... US-க்கு ரஷ்யா மரண அடி india vs us tax war | modi putin friendship | trump
அமெரிக்க அதிபர் சீட்டில் உட்கார்ந்த 24 மணி நேரத்தில் உக்ரைன், ரஷ்யா போரை நிறுத்தி விடுவேன் என்று டிரம்ப் சொல்லி இருந்தார். ஆனால் அவர் அதிபர் ஆக பதவி ஏற்று கிட்டத்தட்ட 8 மாதங்கள் ஆகி விட்டன. ஆனால் அவரால் போரை நிறுத்த முடியவில்லை. இது அவருக்கு கவுரவ பிரச்னையாகி விட்டது. ரஷ்யாவிடம் இந்தியா, சீனா போன்ற நாடுகள் கச்சா எண்ணெய் வாங்குவதால் தான் உக்ரைனுக்கு எதிராக அந்த நாட்டால் சண்டை செய்ய முடிகிறது என்று அமெரிக்கா சொன்னது. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை தடுக்க அடாவடியாக இந்தியாவுக்கு வரி போட்டார் டிரம்ப். வர்த்தக காரணங்களுக்காக 25 சதவீதம், எண்ணெய் வாங்குவதற்கு அபராதமாக 25 சதவீதம் வரி விதித்தார். ஆனால் டிரம்ப் வரியை இந்தியா கண்டுகொள்ளவில்லை. ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை கொஞ்சம் கூட குறைக்கவில்லை. மாறாக, அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியாவுக்கு அமெரிக்கா வரி போட்டு பலன் அளிக்காததால், இந்தியா, சீனாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளை திருப்பி விடும் வேலையில் டிரம்ப் இறங்கினார். ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நேட்டோ நாடுகள் நிறுத்த வேண்டும். எண்ணெய் வாங்கும் மற்ற நாடுகளுக்கு 100 சதவீதம் வரி போட வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த நிலையில் தான் அமெரிக்காவுக்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதோடு, இந்தியா-ரஷ்யா உறவை யாராலும் தொட முடியாது என்று பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் கூறியது: ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை தடுக்க இந்தியாவுக்கு தொடர்ந்து அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது. இப்போது நேட்டோ மூலமும் அழுத்தம் கொடுக்கிறது. ஆனால் இந்தியா உறுதியான நிலைப்பாடு எடுத்துள்ளது. எவ்வளவோ அச்சுறுத்தல் இருந்தும் இந்தியா உறுதியுடன் நிற்கிறது. இந்தியா-ரஷ்யா உறவை சிதைக்க நினைக்கும் எந்த ஒவொரு முயற்சியும் தோல்வியில் தான் முடியும். இந்தியா-ரஷ்யா நட்பு பல ஆண்டுகளாக வலிமை அடைந்து வருகிறது. நட்பு, கலாசாரம், வர்த்தகம் உட்பட பல விஷயங்களில் இந்த நட்பு வேரூன்றி இருக்கிறது.