மர்ம நபர்களின் செயலால் பரபரப்பான எடப்பாடி | Salem Police | Crime | Edappadi
போலீஸ் ஸ்டேஷன் மீதே.. அதிகாலை நடந்த துணிகரம்! சேலம் மாவட்டம் எடப்பாடி போலீஸ் ஸ்டேஷன் மீது இன்று அதிகாலை 3 மணியளவில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். அடுத்தடுத்து 2 குண்டுகள் சுவர் மீது வெடித்து தீ பிடித்தது. சத்தம் கேட்டு டூட்டியில் இருந்த கான்ஸ்டபிள் ராமச்சந்திரன் ஓடி வந்தார். குண்டு வீசிய நபர்கள் யாரும் அங்கில்லை. தீயை அணைத்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். எஸ்பி அருண் கபிலன், சங்ககிரி டிஎஸ்பி ராஜா குண்டு வீசப்பட்ட இடங்களை ஆய்வு செய்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை கைப்பற்றினர். குண்டு வீசிய மர்ம நபர்களை அருகே உள்ள கடைகள் மற்றும் பஸ் ஸ்டாண்டில் உள்ள சிசிடிவிகளை ஆய்வு செய்து தேடி வருகின்றனர்.
ஆக 06, 2024