சமந்தா பற்றி சொன்னதை வாபஸ் பெற்ற சுரேகா Actress Samanta |Telangana Minister Konda Sureka |
பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் விண்ணைத் தாண்டி வருவாயா உள்ளிட்ட சில படங்களில் ஜோடியாக நடித்தனர். காதலித்து 2017-ல் திருமணம் செய்தனர். மூன்றே ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 2021ல் விவாகரத்து பெற்றனர். நடிகர் நாக சைத்தன்யா நடிகை சோபிதா துலிபாலாவை 2-வது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். இந்த நிலையில் தெலங்கானா காங்கிரஸ் அரசின் வனத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா, மேடக் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பாஜ எம்.பி. ரகுநந்தன் ராவ் அமைச்சர் சுரேகாவுக்கு மரியாதைக்காக மாலை அணிவித்தார். அந்த போட்டோவை சிலர் சமூக வலைதளத்தில் பரப்பி அமைச்சருக்கு எதிராக அவதூறு பரப்பினர். பி.ஆர்.எஸ். கட்சியினர்தான் இப்படி செய்தனர். அவர்களை சந்திரசேகர ராவும், அவர் மகன் கே.டி.ராமராவும்தான் தூண்டிவிட்டனர் என அமைச்சர் சுரேகா குற்றம் சாட்டினார். ராமராவ் பல நடிகைகளின் வாழ்க்கையில் விளையாடி உள்ளார். சில நடிகைகளை போதைபழக்கத்துக்கு ஆளாக்கினார். இவரது தொந்தராவால் சில நடிகைகள் சினிமாவை விட்டு ஓடினர்.