திருநள்ளாறில் சனிப் பெயர்ச்சி பரிகார பூஜை எப்போது? Sani Peyarchi 2026| Sani Peyarchi 2025| Thirunal
ஜோதிட சாஸ்திரப்படி இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிபகவான் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடம் பெயர்வதை சனிப்பெயர்ச்சி என்கிறோம். அதன் படி, 2025 மார்ச் 29ம் தேதி சனி பகவான் கும்பராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெயர்வதாக பல்வேறு ஜோதிடர்கள், பல கோயில் அர்ச்சகர்கள் கூறி வருகின்றனர். சில கோயில்களில் சனிப் பெயர்ச்சிக்கான சிறப்பு பரிகார பூஜைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது திருக்கணித பஞ்சாங்கப்படி நடப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் உலக பிரசித்தி பெற்ற காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயில் சார்பில், சனிப்பெயர்ச்சி பற்றிய விளக்கம் தரப்பட்டுள்ளது. பக்தர்கள், ஜோதிடர்கள், அர்ச்சகர்கள் மத்தியில் சனிப் பெயர்ச்சி தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக மார்ச் 29ல் சனிப்பெயர்ச்சி நடக்கும் எனவும் தகவல் வெளியாகி வருகிறது. திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம், சனீஸ்வர பகவான் புண்ணிய திருத்தலம் வாக்கிய பஞ்சாங்க முறையை பின்பற்றுவதை தெளிவுபடுத்துகிறோம். அதன் படி, 2026ல் தான் சனிப்பெயர்ச்சி. இந்த ஆண்டு மார்ச் 29ம் தேதி திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் வழக்கமான தினசரி பூஜைகள் மட்டுமே நடக்கும்.