உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எம்எல்ஏ உதவியாளருடன் என்ன தொடர்பு? பறந்தது நோட்டீஸ் | Scam Andhra Pradesh | Tamanna Bhatia

எம்எல்ஏ உதவியாளருடன் என்ன தொடர்பு? பறந்தது நோட்டீஸ் | Scam Andhra Pradesh | Tamanna Bhatia

ஆந்திராவில் 2019 முதல் 2024 வரை ஜெகன் மோகன் தலைமையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. அப்போது மது விற்பனையில், 3,500 கோடி ரூபாய் ஊழல் நடந்தது தெரியவந்தது. இந்த முறைகேடுகளை கண்டுபிடித்து வழக்கு போட்டவர்களில் முக்கியமானவர் நடிகை ரம்பாவின் சகோதரர் வெங்கடேஸ்வர ஸ்ரீனிவாசராவ். இவரோடு முகேஷ் குமார் என்ற ஐஏஎஸ் அதிகாரியும், இன்னும் பல அதிகாரிகளும் சேர்ந்து மது விற்பனை முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தனர். இது குறித்து சில மாதங்களாக தீவிரமாக விசாரித்த அதிகாரிகள், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேரை கைது செய்தனர். இதில் கைதானவர்களில் முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் ரெட்டி மற்றும் அவரது உதவியாளர் வெங்கடேஷ் ஆகியோர் முக்கியமானவர்கள். சமீபத்தில் வெங்கடேஷ் கட்டு கட்டாக பணம் வைத்திருந்த வீடியோ வெளியானது. இப்போது மதுபான மோசடி வளையத்தில் நடிகை தமன்னாவின் பெயரும் அடிபடுகிறது. ஊழல் பணத்தின் மூலம் நடிகை தமன்னா நடத்தி வரும் ஒயிட் அண்ட் கோல்டு கம்பெனி கிட்டத்தட்ட 300 கிலோ தங்கம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக வெங்கடேஷ் உடன் தனி விமானத்தில் சென்ற தமன்னாவின் போட்டோக்கள் வெளியானது. இதனால் இந்த மோசடியில் நடிகை தமன்னாவிற்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகத்தில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். இது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் பல அரசியல் பிரபலங்கள், முக்கிய புள்ளிகள், சினிமா பிரபலங்கள் சிக்குவார்கள் என கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழக டாஸ்மாக் ஊழல் புகார் தொடர்பாக நடந்த ரெய்டில் சினிமா துறையை சேர்ந்த சிலர் சிக்கினர். இதே போன்ற சம்பவம் தற்போது தெலுங்கு சினிமாவிலும் நடந்துள்ளது.

ஆக 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !