/ தினமலர் டிவி
/ பொது
/ 10 இடங்களில் IT ரெய்டு: நடிகர் ஆர்யா திடீர் விளக்கம் sea shell hotel chennai actor arya IT raid in 1
10 இடங்களில் IT ரெய்டு: நடிகர் ஆர்யா திடீர் விளக்கம் sea shell hotel chennai actor arya IT raid in 1
துபாயை தலைமையிடமாக கொண்ட ஸீ ஷெல் sea shell உணவகம், தமிழகம், கேரளாவில் பல கிளைகளை கொண்டு இயங்கி வருகிறது. இந்த உணவகங்களில் அரேபிய உணவு வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் அண்ணாநகர், வேளச்சேரி, கொட்டிவாக்கம் உள்ளிட்ட 5 இடங்களில் ஸீ ஷெல் உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வரி ஏய்ப்பு நடப்பதாக வருமான வரித்துறைக்கு புகார்கள் சென்றன. அதன் அடிப்படையில், சென்னையில் அண்ணா நகர், வேளச்சேரி, கொட்டிவாக்கம் ஆகிய இடங்களில் உள்ள ஸீ ஷெல் உணவகத்தில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
ஜூன் 18, 2025