உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காக்கி சட்டையை பார்த்தால் சீமானுக்கு இவ்வளோ பயமா? | Seeman | Varun Kumar Ips

காக்கி சட்டையை பார்த்தால் சீமானுக்கு இவ்வளோ பயமா? | Seeman | Varun Kumar Ips

திருச்சி எஸ்பியாக இருப்பவர் வருண் குமார் ஐபிஎஸ். இவருக்கும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கும் இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது நாம் தமிழர் கட்சியின் சட்டை துரைமுருகன் கருணாநிதி குறித்து அவதூறாக பாடல் பாடியதாக கூறப்படுகிறது. திமுகவினர் கொடுத்த புகாரின் பேரில் சாட்டை துரைமுருகனை திருச்சி போலீசார் கைது செய்தனர். இது குறித்து கண்டனம் தெரிவித்த சீமான் எஸ்பி வருண் குமாரை சாதிய ரீதியாக விமர்சனம் செய்திருந்தார். இதையடுத்து எஸ்பி வருண் குமார் சீமானுக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பினார்.

ஆக 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை