உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சீசிங் ராஜா&கூட்டாளி வீடுகளில் சிக்கியது என்னென்ன? Police, Revenue officials raid

சீசிங் ராஜா&கூட்டாளி வீடுகளில் சிக்கியது என்னென்ன? Police, Revenue officials raid

சென்னை அருகே உள்ள சேலையூரைச் சேர்ந்தவர் சீசிங் ராஜா. பிரபல ரவுடி. பகுஜன் சமாஜ் முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்ட நிலையில், கடந்த செப்டம்பரில் சீசிங் ராஜாவை சென்னை போலீசார் ஆந்திராவில் கைது செய்தனர். சென்னை கொண்டு வரப்பட்ட அவன் மறுநாள் ஈசிஆர் சாலை அருகே என்கவுன்டரில் கொல்லப்பட்டான். வேறொரு வழக்கு விசாரணையின்போது போலீசை சுட முயன்றான். அவனை என்கவுன்டர் செய்தோம் என போலீசார் கூறினர். சீசிங் ராஜா மீது 6 கொலை வழக்குகளும், ஆள் கடத்தல், பணம் மிரட்டுதல் நில அபகரிப்பு கட்டப்பஞ்சாயத்து என 30க்கு மேற்பட்ட வழக்குகளும் உள்ளன. சீசிங் ராஜாவும், அவனது கூட்டாளிகளும் பல இடங்களில் அரசு நிலங்களை வளைத்து போட்டு போலி ஆவணங்கள் தயாரித்து விற்றுள்ளனர். அந்த வகையில், சேலையூர் அடுத்த அகரத்திலும் ஒரு ஏக்கர் அரசு நிலத்தை 2015 ல் வளைத்து போட்டு பிளாட் போட்டு விற்றுள்ளான். தனிநபர்களை மிரட்டியும் சீசிங் ராஜாவும் கூட்டாளிகளும் நிலங்களை அபகரித்துள்ளனர்.

நவ 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ