இப்படி பேசினால் அடுத்த தலைமுறை எப்படி உருப்படும் | Sellur Raju case | Ex minister | ADMK | High cour
மதுரையில் 2023 மே 29ல் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ முதல்வருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசியதாக வழக்கு பதிவானது. மதுரை மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் விசாரணையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய கோரி செல்லூர் ராஜு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எதிர்க்கட்சி எம்எல்ஏ என்ற முறையில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினேன். முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசவில்லை என்றும் தனது கருத்தை மட்டுமே சொன்னதாகவும் செல்லூர் ராஜு தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் பேசியுள்ளதால் செல்லூர் ராஜு வழக்கை எதிர்கொள்ள வேண்டும். ரத்து செய்யக் கூடாது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. பின்னர் பேசிய நீதிபதி வேல்முருகன், திமுக அதிமுக 2 கட்சிகளும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. நாட்டுக்கு நல்லது செய்யும் எண்ணம் இரு தரப்புக்கும் இல்லை. மாறி மாறி இருவரும் குறை சொல்வதே வாடிக்கையாக வைத்துள்ளீர்கள் என்று அதிருப்தி தெரிவித்தார். சாதனை மட்டும் சொல்லக்கூடிய அளவில் இரு கட்சிகளும் இல்லை. இப்படி பேசினால் அடுத்த தலைமுறை எப்படி உருப்படும் என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதி, தங்கள் இருப்பை தக்க வைத்துக் கொள்ள இரு தரப்பும் மாறி மாறி குறை சொல்லிக்கொண்டு இருக்கிறது.