சுப்ரீம் கோர்ட்டில் புட்டு புட்டு வைத்த அமலாக்கத்துறை | Senthil Balaji | Senthil Balaji Case | ED
பான் விபரமில்லாமல் செந்தில் அக்கவுண்டில் குவிந்த பணம் ED ஷாக் தகவல்! கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 67 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ல் அமலாக்கத்துறை கைது செய்தது. வழக்கில் ஜாமின் கேட்ட அவரது மனுக்கள் சென்னை செசன்ஸ் கோர்ட், ஐகோர்ட்டில் தள்ளுபடி ஆனது. இதில் சென்னை ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை வக்கீல் ஜோஹெப் ஹொசைன் கூறியதாவது; செந்தில் பாலாஜி வீட்டிலிருந்து ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சில ஆவணங்கள், கண்டக்டர் வேலைக்காக 14 கோடி வரை வசூலித்ததை காட்டுகின்றன. ஒவ்வொரு பணியிடமும் விற்கப்பட்டுள்ளது. சில ஆவணங்களில் அமைச்சர் என்பதை ஏ.ஆர், கண்டக்டர் என்பதை சி.ஆர் என மறைமுகமாக குறிப்பிட்டுள்ளனர்.