சிவன் கட்டளையிட்டால் மட்டுமே இங்கு செல்ல முடியும் | Shivatemple | Mahalingam | Pallavas | Temple
காஞ்சிபுரம் மாவட்டம் ஊத்துக்காடு என்ற அழகிய அமைதியான கிராமத்தில்1000 ஆண்டு பழமையான மகாலிங்கேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இப்பகுதியின் நிலத்தில் எங்கு தோண்டினாலும் நீர் ஆதாரங்கள் கிடைக்கும் என்பதால் கிராமத்துக்கு ஊத்துக்காடு என்ற பெயர் வந்தது. மூலவர் மகாலிங்கேஸ்வரர் கிழக்கு நோக்கியும், அம்பாள் பெரியநாயகி தெற்கு நோக்கி காட்சி தருகின்றனர். மிகவும் தனித்தன்மை வாய்ந்த தட்சிணாமூர்த்தி கையில் வீணையுடன் அருள் பாலிக்கிறார். மகா மண்டபத்தில் இருபுறமும் பிள்ளையாரும், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியரையும் காணலாம். இங்குள்ள சிவபெருமான் பாணலிங்க வடிவில் அமைந்திருப்பது சிறப்பு. பல்லவ மன்னர்களின் கலைநயத்தை இந்த கோயில் சொல்லும். ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த கம்பவர்மனால் கட்டப்பட்டது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஞாயிறும் விடிய விடிய தீபம் துலங்குவதற்கு மூன்று பெரிய நந்தா விளக்குகளை வழங்கினான் கம்பவர்மன். இந்த தீபங்கள் தடை இல்லாமல் ஏற்ற வேண்டும் என்பதற்காகவே பொன்னும், பொருளும், நிலமும் வழங்கினான். கோயிலில் மகா மண்டபம், அர்த்த மண்டபம், மிகப்பெரிய விமானங்களுடன் கலை நுட்பங்களும், அழகிய தூண்களும் அழகு சேர்க்கின்றன. பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற சிவபெருமானை வேண்டுகின்றனர். சுவாமிக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து நேர்த்திகடனை செலுத்துகின்றனர். பிரதோஷம், சிவராத்திரியில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். மகாலிங்கேஸ்வரர் கோயில் ஊத்துக்காடு, வாலாஜாபாத் வழி காஞ்சிபுரம் - 631 605