உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மது விற்கும் ஆசாமியிடம் மாமூல் கேட்டு கெஞ்சிய எஸ்ஐ SI suspended salem police SP goutham goyal asking

மது விற்கும் ஆசாமியிடம் மாமூல் கேட்டு கெஞ்சிய எஸ்ஐ SI suspended salem police SP goutham goyal asking

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள இலுப்பநத்தம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார். டாஸ்மாக்கில் இருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து, கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்று வந்தார். இவரிடம் வீரகனூர் போலீஸ் நிலையத்தில் எஸ்.ஐ. ஆக பணியாற்றிய கருப்பண்ணன் போனில் பேசியுள்ளார். கேஸ் இல்லாம பார்த்துக்கலாம்; 2500 ரூபாய் கொடுத்துடு என கருப்பண்ணன் கேட்கிறார். அதற்கு, செந்தில்குமார் 1500 ரூபாய் கொடுப்பதாக கூறுகிறார். எனக்காக கேட்கல; கம்ப்யூட்டருக்கு செலவாகும்ல; கோர்ட்டுக்கு கொடுக்கணும்; அதுக்குத்தான் என எஸ்ஐ சொல்ல, செந்தில்குமார், 1500 ரூபாயிலேயே நிற்கிறார். இதனால் போனை எஸ்ஐ கருப்பண்ணன் கட் செய்து விடுகிறார். செந்தில்குமார் பேசும்போது அவருடன் இருந்தவர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர். ப்ரத் செந்தில்குமார் தரப்பினர் வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பியதால் சேலம் மாவட்ட போலீசார் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி விசாரித்த உயரதிகாரிகள், வீரகனூரில் இருந்து எஸ்ஐ கருப்பண்ணனை சேலம் ஆயுதப்படைக்கு மாற்றினர்.

மார் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை