கர்நாடகாவில் பாஜவுக்கு எதிராக கிளம்பும் புயல் Siddaramaiah| Karnataka Scam| Muda scam
கர்நாடகாவில் மூடா (MUDA) எனப்படும் மைசூரு நகர்புற மேம்பாட்டு ஆணையம் பயனாளிகளுக்கு வீட்டு மனைகள் ஒதுக்கியதில் 4000 கோடிக்கு ஊழல் நடந்ததாக சொல்லப்படுகிறது. இத்திட்டத்தில், முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு 14 மனைகள் ஒதுக்கப்பட்டது சர்சையை கிளப்பி உள்ளது. கர்நாடகா தலைப்பு செய்திகளில் இடம் பிடித்து வந்த இந்த ஊழலை ஒதுக்கி வைக்கும் வகையில், புதிய ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கோவிட் தொற்று பரவிய காலத்தில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜ பாஜ ஆட்சியில், 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. இது பற்றி ஆய்வு செய்ய, தற்போதைய காங்கிரஸ் அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தலைமையில் ஒரு கமிட்டி அமைத்தது. அந்த கமிட்டி 1000 பக்கங்கள் கொண்ட இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ததது. அதில், கோவிட் காலத்தில் செலவு செய்யப்பட்ட நிதியில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் நடந்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் இல்லை என்று சுட்டிக்கட்டப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் சித்தராமையா விவாதித்தார். மைக்கேல் டி குன்ஹா கமிட்டி இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய ஏதுவாக, அதன் பதவிக்காலம் 6 மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.