ரசிகர்களுக்காக ஸ்ரேயா கோஷல் போட்ட அவசர பதிவு | Singer Shreya ghoshal | X Account hacked | Alert Fa
மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் ஸ்ரேயா கோஷல். சினிமா பின்னணி பாடகி. தமிழ், ஹிந்தி உள்ளிட்ட ஏராளமான இந்திய மொழிகளில் சினிமா பாடல்களை பாடி உள்ளார். மேடை கச்சேரியும் நடத்துகிறார். இது தொடர்பான பதிவுகளையும், போட்டோக்களையும் எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டா உள்ளிட்ட சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு வந்தார். இதனால், அந்த பக்கங்களில் ஏராளமானோர் ஸ்ரோயா கோஷலை பின் தொடர்ந்து வருகின்றனர். எக்ஸ் பக்கத்தில் மட்டும் 69 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். சமீபத்தில் உடல் பருமன் பிரச்னைக்கு எதிராக 10 சதவீதம் எண்ணெயை குறைப்போம் என்ற விழிப்புணர்வு பிரசாரத்திற்காக பிரதமர் மோடி 10 பேரை தேர்வு செய்தார். அதில் ஸ்ரேயா கோஷலும் இடம்பெற்று இருந்தார். இந்நிலையில் அவரது எக்ஸ் அக்கவுன்ட் முடங்கி உள்ளதாக ஸ்ரேயா கோஷல் தெரிவித்துள்ளார். இன்ஸ்டா பக்கத்தில் தனது ரசிகர்கள், நண்பர்களுக்காக வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,