உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாலியல் கொடுமை: குடும்பத்தோடு சேர்ந்த கன்னியாஸ்திரி | Sister Anupama | Bishop Franco | nunhood

பாலியல் கொடுமை: குடும்பத்தோடு சேர்ந்த கன்னியாஸ்திரி | Sister Anupama | Bishop Franco | nunhood

கேரளாவின் கோட்டயம் அருகே உள்ள குருவிளங்காட்டில் கத்தோலிக்க சபையைச் சேர்ந்த கன்னியாஸ்திரிகள் ஆசிரமம் உள்ளது. இது பஞ்சாபின் ஜலந்தர் மறைமாவட்டத்தின் கீழ் செயல்பட்டது. அந்த மறைமாவட்டத்தின் பிஷப்பாக பிராங்கோ முலக்கல் பதவி வகித்தார். 2014 முதல் 2016 வரை இவர் பதவியில் இருந்த காலக்கட்டத்தில் கேரளாவுக்கு பயணம் செய்தார். அப்போது கன்னியாஸ்திரியரை மிரட்டி பலாத்காரம் செய்ததாக அவர் மீது 2018ல் புகார் எழுந்தது. குருவிளங்காடு சர்ச்சை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குருவிளங்காடு சர்ச்சில் வைத்து 2014 முதல் 2016 வரை 13 முறை பிஷப் பிராங்கோ முலக்கல் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் என புகாரில் கூறியிருந்தார். புகார் கொடுத்தும் போலீஸ் தரப்பில் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கன்னியாஸ்திரிகள் தெருவில் இறங்கி தொடர் போராட்டங்களை நடத்தினர். அந்த போராட்டத்திற்கு தலைமை வகித்தவர் கன்னியாஸ்திரி அனுபமா. இதனால் அனுபமா உள்ளிட்ட சில கன்னியாஸ்திரிகளை சபை நிர்வாகம் இடம் மாற்றம் செய்தது. ஆனாலும் போராட்டம் தீவிரமானதை அடுத்து பிஷப் பிராங்கோ முலக்கல் சபையில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். அவர் மீது பாலியல் வன்கொடுமை உள்பட 7 பிரிவுகளில் வழக்குப் பதிவும் செய்யப்பட்டது. அந்த வழக்கின் பேரில் 2018 செப்டம்பர் 21ம் தேதி பிஷப் பிராங்கோ முலக்கல் கைது செய்யப்பட்டர். பிஷப்புக்கு எதிராக பாதிரியார் குரியகோஸ் கட்டுத்தாரா என்பவர் வாக்குமூலம் அளித்திருந்தார். அவரும் 2018ல் மர்மமான முறையில் மரணம் அடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

மே 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை