யாரும் இல்லாத வீடுகள் ஒரே ஒருவர் வசிக்கும் கிராமம் | Sivaganga | Nattakudi village
சிவகங்கை அருகே மாத்தூர் ஊராட்சியில் உள்ளது நாட்டாகுடி கிராமம். 100க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வந்த நிலையில், அடிப்படை வசதிகள் இல்லை என பலர் வெளியேறினர். குடிநீருக்காக 2 கி.மீ நடந்து சென்று ஊற்று தோண்டி நீர் எடுக்கும் அவலம் இருந்தது. அடிப்படை வசதிக்காக மனு கொடுத்தும் விடை கிடைக்காமல் 50 குடும்பங்கள் மட்டுமே வசித்து வந்தனர். இந்த சூழலில் இக்கிராமத்தை சேர்ந்த அதிமுக கிளை செயலாளர் கணேசன் சென்ற நவம்பர் 4ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சென்ற மாதம் 20ம் தேதி விவசாயி சோணைமுத்து தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார். மர்மமான முறையில் நடந்த இரண்டு கொலை சம்பவங்கள் கிராம மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. கிராமத்தில் பெரும்பாலானோர் வெளியேறிய நிலையில் நேற்று மீதமிருந்த 3 வயதானவர்களும் காலி செய்தனர்.