உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தப்பி ஓட முயன்ற போது சிவகங்கையில் சம்பவம் | Sivagangai | Sivagangai Police | Crime | Bjp

தப்பி ஓட முயன்ற போது சிவகங்கையில் சம்பவம் | Sivagangai | Sivagangai Police | Crime | Bjp

பாஜ பிரமுகரை தீர்த்து கட்டிய வழக்கில் ரவுடி மீது டுமீல்! சிவகங்கை வேளாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பாஜ மாவட்ட கூட்டுறவு பிரிவு செயலாளர் செல்வகுமார், வயது 50 சனிக்கிழமை இவரது வீடு அருகே இரவில் பைக்கில் சென்ற போது மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்டார். இந்த வழக்கில் அதே கிராமத்தை சேர்ந்த மருதுபாண்டி, அருள், வசந்த் உள்ளிட்ட ஐந்து பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதில் வசந்த், வயது 24. சரித்திர பதிவேடு குற்றவாளி. 2019ல் புவனேஸ்வரன் என்பவர் வேளாங்குளம் கிராமத்தில் வெட்டி கொல்லப்பட்டார். அதில் செல்வகுமார் மற்றும் அவரது மகன் ஆசை பின்னணியில் இருக்கலாம் என்ற கோணத்தில் பழிக்குப்பழி இந்த கொலை நடந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்ய கைதான ரவுடி வசந்தை போலீசார் இன்று அழைத்து சென்றனர். அப்போது போலீசார் சுதாரிக்கும் முன் ஆயுதங்களால் தாக்கி விட்டு வசந்த் தப்பி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

ஜூலை 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை