/ தினமலர் டிவி
/ பொது
/ கிரிக்கெட் விளையாடிய இளைஞர்களால் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகூடு! Skeleton | Abandoned House
கிரிக்கெட் விளையாடிய இளைஞர்களால் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகூடு! Skeleton | Abandoned House
ஐதராபாத் நாம்பள்ளி சந்தை பகுதியில் இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது பந்து அருகில் உள்ள பாழடைந்த வீட்டுக்குள் சென்று விழுந்தது. அதை எடுக்க இளைஞர்கள் சென்றனர். அப்போது வீட்டுக்குள் மனித எலும்புகூடு ஒன்று கிடப்பதை இளைஞர்கள் பார்த்தனர். அதிர்ச்சி அடைந்த இளைஞர்களில் ஒருவர் அதை வீடியோ எடுத்தார். அதை தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து அந்த வீட்டில் சோதனை நடத்தினர். எலும்புகளை மீட்டு தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஜூலை 15, 2025