உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்னையில் களைகட்டும் தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ Smart Shoppers Expo| dinamalar|

சென்னையில் களைகட்டும் தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ Smart Shoppers Expo| dinamalar|

தினமலர் நாளிதழ் மற்றும் சத்யா இணைந்து வழங்கும் தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ வீட்டு உபயோக பெருட்கள் நுகர்வோர் கண்காட்சி, சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த 3 நாட்களாக நடக்கிறது. ஏசி வசதியுடன் 250க்கு மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. கண்கட்சியில் வீட்டுக்கு தேவையான கட்டில், பீரோ, ஏசி, வாஷிங் மிஷன், பர்னிச்சர்கள், அலங்கார பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் என அத்தனையும் ஒரே இடத்தில் கொட்டி கிடக்கிறது. அனைத்தும் மிக குறைந்த விலையில் கிடைப்பதால் மக்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது. குழந்தைகள், வயதானவர்களுடன் வருபவர்கள் எளிதாக கண்காட்சி திடலுக்குள் செல்ல மைதானத்தின் நுழைவு வாயிலில் இருந்து பேட்டரி கார் வசதி செய்துள்ளதை அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். தமிழகத்தின் முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களை சேர்ந்த கைவினைஞர்களின் உற்பத்தி பொருட்களும் குவிந்துள்ளன. பெண்களுக்கு தேவையான அழகு சாதன பொருட்கள், உடைகள், நகைகள், குழந்தைகளுக்கான விதவிதமான விளையாட்டு பொருட்களும் ஏராளமாக கிடைக்கிறது. ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போவின் ஒரு பகுதியாக, பில்ட் எக்ஸ்போ, ஆட்டோமொபைல்ஸ் எக்ஸ்போவும் நடக்கிறது. இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள சலுகை விலையில் விற்பனைக்கு வந்துள்ளன. இது தவிர புது வீடு வாங்க விரும்வோரின் கனவு இல்லத்தை நனவாக்கவும் இங்கு ஸ்டால்கள் உள்ளன. இதுதவிர பேட்டரி கார், வாட்டர் போட், சிக்குபுக்கு ரயில், பலூன் ஷூட், ஒட்டக சவாரி என குழந்தைகள் விளையாடி மகிழ ஏராளமான விளையாட்டுகள் காத்திருக்கிறது. குழந்தைகளை மகிழ்க்க மேஜிக் ஷா உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. ஷாப்பிங் முடித்த களைப்பு தீர, சுடச்சுட உணவு பரிமாற புட் கோர்ட்டும் உள்ளது. சைவம், அசைவத்தில் விதவிதமான உணவுகளை விருப்பம் போல் ருசிக்கலாம். சென்னையில் தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ, ஆகஸ்ட் 4 வரை காலை 10 முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது.

ஆக 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை