உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சோனாமார்க் சுரங்கப்பாதை நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி | Z-Morh Tunnel | Sonmarg tunnel in J-K

சோனாமார்க் சுரங்கப்பாதை நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி | Z-Morh Tunnel | Sonmarg tunnel in J-K

ஜம்மு காஷ்மீரின் கந்தேர்பால் மாவட்டத்தில் உள்ள காகங்கீர் மற்றும் சோனாமார்க்கை இணைக்கும் வகையில் இந்த இசட் வடிவ சுரங்கப்பாதை அமைந்துள்ளது. ஸ்ரீநகர் டு லே இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் 2,700 கோடி செலவில் உருவாகி உள்ளது. 6.5 கிமீ நீளத்துக்கு கடல் மட்டத்திலிருந்து 8,652 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இரு வழிப்பாதையாக தலா 10 மீ அகலம் கொண்ட சிக் - சாக் வளைவுகளுடன் இந்த சுரங்கப் பாதை உள்ளது. இமயமலை சூழலை கருத்தில் கொண்டு இந்த இசட் வடிவ சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 80 கிமீ வேகத்தில் ஒரு மணி நேரத்திற்கு 1,000 வாகனங்கள் வரை இதில் செல்ல முடியும். சுரங்கப்பாதையின் அருகில் 10 மீ அகலத்தில் மற்றொரு சுரங்கப் பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. பனிபொழிவில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் இந்த பாதை மூலம் பயண நேரம் கணிசமாக குறையும். ஸ்ரீநகர் டு லடாக் இடையே அனைத்து வானிலைகளிலும் இனி வாகனங்கள் தடை இன்றி சென்று வர முடியும். ஸ்ரீநகர் மற்றும் லடாக் இடையே ஆண்டு முழுதும் தடையற்ற போக்குவரத்தையும் உறுதி செய்யும்.

ஜன 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி