/ தினமலர் டிவி
/ பொது
/ நீர்நிலை அருகே உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்! southwest monsoon | Ooty | Covai
நீர்நிலை அருகே உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்! southwest monsoon | Ooty | Covai
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டும், திருநெல்வேலி, தென்காசி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில், மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு பெய்த கனமழையால் நகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. குனியமுத்துார் மின் நகரில் பெரிய வேப்ப மரம் விழுந்து மின்கம்பம், வீட்டின் காம்பவுன்ட் சுவர் சேதமடைந்தது.
மே 26, 2025