/ தினமலர் டிவி
/ பொது
/ நமோ பாரத் ரேபிட் ரயிலில் இவ்ளோ வசதி இருக்கா | Special of Namo Bharat rapid rail | 1st vande metro
நமோ பாரத் ரேபிட் ரயிலில் இவ்ளோ வசதி இருக்கா | Special of Namo Bharat rapid rail | 1st vande metro
நாட்டின் முதல், நமோ பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் நேற்று துவக்கி வைத்தார். குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தின் புஜ் மற்றும் ஆமதாபாத் இடையே வந்தே மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார். பிரதமர் துவங்கி வைப்பதற்கு சில மணி நேரம் முன்பு நமோ பாரத் விரைவு ரயில் என வந்தே மெட்ரோ ரயிலின் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. புஜ், ஆமதாபாத் ரயில் நிலையங்கள் இடையேயான 360 கிலோ மீட்டர் தூரத்தை 5 மணி நேரம் 45 நிமிடங்களில் இந்த ரயில் கடக்கும். கட்டணம் 455 ரூபாய். புஜ், ஆமதாபாத் இடையே 9 நிறுத்தங்கள். வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும்.
செப் 17, 2024