உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோவை காதலனை பார்க்க உயிரை பணயம் வைத்த இலங்கை பெண் | Sri Lankan Women | Palani Sri Lankan refugee

கோவை காதலனை பார்க்க உயிரை பணயம் வைத்த இலங்கை பெண் | Sri Lankan Women | Palani Sri Lankan refugee

தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் புதனன்று அதிகாலை இளம்பெண் ஒருவர் தனியாக நடந்து சென்றுள்ளார். இது குறித்து அப்பகுதி மீனவர்கள் போலீசுக்கு தகவல் தகவல் தெரிவித்தனர். கடலோரப் பாதுகாப்பு படை மற்றும் க்யூ பிரிவு போலீஸார் அங்கு சென்றனர். சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அவர் இலங்கையின் திரிகோணமலை மாவட்டம் ஆண்டான்குளத்தை சேர்ந்த விதுர்ஷியா என்பது தெரியவந்தது. இவரது தந்தை வேல்முருகன். 2003ல் இலங்கையில் போர் தீவிரமடைந்த போது குடும்பத்துடன் அகதியாக இந்தியா வந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள இலங்கை தமிழர் முகாமில் தங்கி இருந்தனர். 2016ல் மீண்டும் இலங்கைக்கே திரும்ப சென்றனர். வேல்முருகன் குடும்பம் இந்தியா வந்த போது விதுர்ஷியா கை குழந்தை. 2016 வரை தமிழகத்தில் தான் படிப்பு முடித்துள்ளார். இலங்கை சென்றதும் அங்குள்ள கல்வி முறை அவருக்கு சிரமமாக இருந்துள்ளது. இதனால் மீண்டும் இந்தியாவுக்கே திரும்ப வந்த பழனியில் வாடகை வீடு எடுத்து தங்கினார். அங்கிருந்து கல்லூரி படிப்பை முடித்தார். அப்போது தன்னுடன் படித்த கவி பிரகாஷ் என்பவரை காதலித்தார்.

ஆக 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை