/ தினமலர் டிவி
/ பொது
/ எஸ் எஸ் ஹைதராபாத் பொன்னேரி கிளைக்கும் சீல் ss hyderabad biryani kodugaiyur ponneri branches sealed
எஸ் எஸ் ஹைதராபாத் பொன்னேரி கிளைக்கும் சீல் ss hyderabad biryani kodugaiyur ponneri branches sealed
எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி ஓட்டல், சென்னை மற்றும் புறநகர்களில் பல கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. கொடுங்கையூர் பகுதியில் எஸ்.எஸ்., ஹைதராபாத்தில் கடந்த 16ம் தேதி பிரியாணி வாங்கி சாப்பிட்ட, 40 பேரின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற உடல் உபாதைகளுடன் வெவ்வேறு மருத்துவமனைகளில் அட்மிட் ஆயினர். இதுகுறித்த புகாரின்பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் கொடுங்கையூர் பிரியாணி கடையில் சோதனை நடத்தினர். கெட்டுப்போன பிரியாணிதான் பிரச்னைக்கு காரணம் என தெரிய வந்தது. கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். பொன்னேரி எஸ்எஸ் ைஹதராபாத் ஓட்டலிலும் இதே பிரச்னை ஏற்பட்டது.
செப் 21, 2024