செலவு செய்து ஊராட்சி செயலர்கள் புலம்பல் | Stalin camp | DMK | TNgovt | Ungaludan Stalin
ஜூலை 15ல் முதல்வர் ஸ்டாலின், உங்களுடன் ஸ்டாலின் முகாமை துவக்கி வைத்தார்.
அக்டோபர் வரை 10 ஆயிரம் இடங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
ஜாதி சான்று, பட்டா பெயர் மாற்றம், புதிய பட்டா, பென்ஷன், மகளிர் உரிமை தொகை, மருத்துவ காப்பீடு விண்ணப்பம், ஆதார் மற்றும் ரேஷன் கார்டில் திருத்தம் கேட்டு மக்கள் மனு அளித்து வருகின்றனர்.
பட்டா கேட்டும், பட்டா பெயர் மாற்றம் கோரியும், அதிக அளவில் மனுக்கள் வருகின்றன.
அவர்களிடம் நிலத்தின் சந்தை மதிப்புக்கு தகுந்தபடி, வருவாய் துறையினர் மறைமுக வசூலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
தலையாரி முதல் தாசில்தார் வரை லஞ்சப் பணம் கைமாறுகிறது. ஆயிரத்தில் துவங்கி லட்சங்களில் பெறப்படுகிறது.
இதேபோல் சொந்த இடங்களுக்கு மட்டுமின்றி, சர்ச்சைக்குரிய இடங்களுக்கும், நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள கட்டடங்களுக்கும் மின் இணைப்பு கேட்டு பலர் மனு கொடுத்துள்ளனர்.