உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / PET ஸ்கேன் எடுக்கப்படுவதன் பின்னணி | Stalin PET Scan | MK Stalin Hospital

PET ஸ்கேன் எடுக்கப்படுவதன் பின்னணி | Stalin PET Scan | MK Stalin Hospital

சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ ஆஸ்பிடலில் முதல்வர் ஸ்டாலின் அட்மிட் செய்யப்பட்டுள்ளார். திங்களன்று காலை வாக்கிங் சென்ற போது தலைசுற்றல் ஏற்பட்டதை தொடர்ந்து அவரது உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ ஆஸ்பிடலில் இருந்து தேனாம்பேட்டை அப்போலோ ஆஸ்பிடல் அழைத்து செல்லப்பட்டார். அங்கு ஸ்டாலினுக்கு PET Scanning பரிசோதனை செய்யப்பட்டது. சோதனைக்கு பின் மீண்டும் கிரீம்ஸ் ரோடு அப்போலோ ஆஸ்பிடலுக்கு அழைத்து செல்லப்பட்டார். ஸ்டாலினுக்கு தற்போது எடுக்கப்பட்ட PET ஸ்கேன் மாற்ற எல்லா வகையான ஸ்கேன்களை விட மேம்பட்டது. பாசிட்ரான் எமிஷன் டோமோகிராபி(Positron Emission Tomography Scan) என்பதையே சுருக்கமாக PET ஸ்கேன் என்கின்றனர். வழக்கமான CT ஸ்கேன், MRI ஸ்கேன் உள்ளிட்டவை உடல் உறுப்புகளின் கட்டமைப்பை மட்டும் தான் காட்டும். ஆனால் PET ஸ்கேன் மூலம் திசுக்களின் வளர்சிதை மாற்றத்தையும் துல்லியமாக தெரிந்துகொள்ள முடியும். இந்த பரிசோதனைக்கு முன் ரேடியோ ட்ராசர் (Radio Tracer) என்கிற கதிரியக்க பொருள் ஊசி மூலம் உடலில் செலுத்தப்படும். பொதுவாக இது குளுக்கோஸ் போல நரம்புக்குள் செலுத்தப்படுகிறது. இந்த கதிரியக்கப் பொருள் ரத்த ஓட்டத்தில் கலந்து உடல் முழுவதும் பரவுகிறது. உடலின் உறுப்புகள் மற்றும் திசுக்கள் இந்த ட்ரேசரை உறிஞ்சுகின்றன. அதிக வளர்சிதை மாற்ற செயல்பாடு கொண்ட செல்கள், சாதாரண செல்களை விட அதிகமாக இந்த ட்ரேசரை உறிஞ்சுகின்றன.

ஜூலை 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !