பிளஸ் 2 ரிசல்ட்டுக்கு காத்திருந்த பிளஸ் 2 மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம் student stabbed to d
கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்தவர் ஷியாம் சுந்தர் 17. பிளஸ் டு தேர்வு எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காக காத்துக் கொண்டிருந்தார். நேற்றிரவு குளித்தலை மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. சாமிக்காக வாகனத்தில் பூக்களை பக்தர்கள் ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு சென்றனர். ஷியாம் சுந்தர் உள்ளிட்ட சில இளைஞர்கள் ஊர்வலத்தின் முன்னால் நடனமாடியபடி வந்தனர். அப்போது, ஷியாம் சுந்தர் மீது நாகேந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் விழுந்துள்ளனர். இதுனால் ஷியாம் சுந்தரும் தடுமாறி கீழே விழுந்தார். அப்போதுதான் நாகேந்திரனும், அவரது நண்பர்களும் மது போதையில் இருப்பதை ஷியாம் சுந்தர் உணர்ந்தார். மேலே விழாமல் ஓரமாக நடனம் ஆடும்படி நாகேந்திரனிடம் ஷியாம் சுந்தர்் கூறியதால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.