உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஜாதிய மோதலால் ஆயுதங்களுடன் பள்ளிக்கு வந்த மாணவன் | Student with weapons | Came to school | Tirunelv

ஜாதிய மோதலால் ஆயுதங்களுடன் பள்ளிக்கு வந்த மாணவன் | Student with weapons | Came to school | Tirunelv

புத்தக பையில் ஆயுதங்கள் மிரள வைத்த மாணவன்! நெல்லையில் சம்பவம் திருநெல்வேலியில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பள்ளிகளில் மாணவர்கள் ஜாதி ரீதியாக மோதிக் கொள்ளும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. நாங்குநேரி மாணவன் மீது வீடு புகுந்து கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடங்கி அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி என பாரபட்சமின்றி அனைத்து பள்ளிகளிலும் 2 பிரிவுகளாக மாணவர்கள் மோதிக்கொள்ளும் சம்பவங்கள் நடக்கின்றன. திருநெல்வேலி நகர் பகுதியில் இருக்கும் சாப்டர் அரசு உதவி பெறும் பள்ளியில், புறநகரில் இருந்து இரண்டு வெவ்வேறு ஜாதிகளை சேர்ந்த மாணவர்கள் 9, 10ம் வகுப்பு படித்து வந்ததாக தெரிகிறது. அவர்கள் இரண்டு குழுக்களாக தொடர்ந்து மோதிக்கொண்டு வந்துள்ளனர். ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்த திட்டமிட்டு கடந்த 18ம் தேதி அரிவாள், இரும்பு ராடு உள்ளிட்ட ஆயுதங்களோடு பள்ளிக்கு வந்ததாக தெரிகிறது. புத்தகம் வைக்கும் பைக்குள் ஆயுதங்கள் இருப்பதை பார்த்த ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பேக்கில் வைத்து கொண்டு வந்த ஒரு மாணவன் பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளான். இதில் தொடர்புடைய மற்றொரு பிரிவை சேர்ந்த 3 மாணவர்கள் தற்காலிகமாக பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஆனால் பள்ளி நிர்வாகம் இதுதொடர்பாக போலீசுக்கு தகவலோ, புகாரோ அளிக்கவில்லை. சம்பவம் நடந்து ஒரு வார காலத்திற்கு பிறகே தகவல் வெளியில் வந்துள்ளது. இப்போது போலீசார் பள்ளியில் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.

செப் 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி