உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோயில் நில மோசடியில் ஜான்சன் சிக்கியது எப்படி? | parvatheeswarar temple land scam | Sub collector Jo

கோயில் நில மோசடியில் ஜான்சன் சிக்கியது எப்படி? | parvatheeswarar temple land scam | Sub collector Jo

கோயில் நிலம் விற்ற அதிர்ச்சி சப்-கலெக்டர் ஜான்சன் கைது! திடுக்கிடும் பின்னணி காரைக்கால் மாவட்டம் கோவில்பத்து கிராமத்தில் பார்வதீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தை, ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக சுற்றுலா துறைக்கும், இந்திய எரிவாயு ஆணையத்திற்கும் வழங்கியதாக காரைக்கால் சப் கலெக்டர் ஜான்சன், முன்னாள் கலெக்டர் ஆகியோரின் கையெழுத்துடன் கூடிய அரசாணை சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து விசாரித்து, குற்றவாளிகளை கைது செய்யக்கோரி இந்து முன்னணி சார்பில், கவர்னர் கைலாஷ்நாதன் மற்றும் காரைக்கால் கலெக்டர் மணிகண்டன் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது. இதற்கிடையே சப் கலெக்டர் ஜான்சன் தனது கையெழுத்தை போலியாக பயன்படுத்தி மோசடி நடந்துள்ளதாக, கடந்த மாதம் காரைக்கால் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சீனியர் எஸ்பி மனிஷ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, இடைத்தரகர் சிவராமனை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், கோயில் நிலத்தை தனி நபர்களுக்கு விற்பனை செய்வதற்காக பண பரிமாற்றம் நடந்த திடுக்கிடும் தகவல் வெளியானது. அதன்பேரில், என்ஆர்காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் ஆனந்த் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்து சிலரை கைது செய்தனர். தலைமறைவான ஆனந்த்தை போலீசார் தேடி வருகின்றனர். இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நில அளவையர் ரேணுகாதேவியை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது, சப் கலெக்டர் ஜான்சன் தலைமையில், கூட்டு சதி நடந்தது தெரியவந்தது.

அக் 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை