கரிகாலச்சோழ மன்னன் எழுப்பிய அற்புத சிவாலயம் | Sun Worshiping Shiva | Trichy
திருச்சி - கல்லணை ரோடு சர்க்கார்பாளையம் கிராமத்தில் கரிகாலச்சோழ மன்னரால் கட்டப்பட்ட பழமையான காசிவிஸ்வநாதர் ஆலயம் உள்ளது. கல்லணையை கட்டுவதற்காக கரிகாலச்சோழன் செல்லும்போது சர்க்கார்பாளையத்தில் இளைப்பாறினார். அப்போது இறைவன் கனவில் தோன்றி அப்பகுதியில் சிவாலயம் அமைக்க உத்தரவிட்டார். இறைவன் சித்தியுடன் காசியில் இருந்து லிங்கம் வரவழைக்கப்பட்டு சர்க்கார்பாளையத்தில் காசிவிஸ்வநாதர் கோயிலை கரிகாலச்சோழன் எழுப்பினார். ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோயில் திருவாணைக்காவல் ஜம்புகேசுவரர் அகிலாண்டேசுவரி கோயிலின் உப கோயிலாக வீற்றிருக்கிறது. இத்தலத்தின் சிறப்பு அம்சமாக ஆண்டு தோறும் ஆவணி மாதத்தில் நடைபெறும் சூரிய பூஜை சிறப்பு வாய்ந்தது. வருடத்தில் வேறு எந்தநாட்களிலும் இல்லாதவாறு ஆவணி மாதம் 7, 8 மற்றும் 9ம் தேதிகளில் சூரியனின் கதிர்கள் மூலஸ்தானத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் சிவலிங்கத்தின் மீது நேரடியாகபடும்.