பூமிக்கு வந்தாலும் டேஞ்சர்: சுனிதா நிலை குறித்து பகீர் தகவல் | sunita williams | NASA | NASA Astrona
சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வு செய்ய அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் சார்பில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆய்வு பணிகளை முடித்துவிட்டு 8 நாட்களில் பூமிக்கு திரும்ப இருந்த நிலையில், அவர்களை சுமந்து சென்ற போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் பழுதானது. ஸ்டார்லைனரில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்ய முடியாத காரணத்தால் இருவரும் திட்டமிட்டப்படி பூமிக்கு திரும்ப முடியாமல் போனது. அவர்களை மீட்கும் நாசாவின் முயற்சிகள் தோல்வியில் முடிந்ததால் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் 9 மாதங்களுக்கு மேலாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ளனர். இந்நிலையில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியை நாடினார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தற்போதைய அமெரிக்க அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் எலான் மஸ்க்கிற்கு சொந்தமானது. அவரது முயற்சியின் விளைவாக பால்கன் 9 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ டிராகன் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. 4 விண்வெளி வீரர்களுடன் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது. இதையடுத்து 9 மாதங்களுக்கு பிறகு சுனிதா வில்லியம்ஸ், வில்மோரும் பூமிக்கு திரும்புகின்றனர். 9 மாதங்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் உடல் ரீதியாக பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி வரும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.