ரேஷன் பொருள் வழங்கும் விஷயத்தில் ஆர்வம் காட்டாத மாநிலங்கள் Supreme court | States | E Sharm Scheme
நாடு முழுதும் பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் மற்ற மாநிலங்களில் வேலை செய்கின்றனர். அவர்களுக்கு அவர்கள் வேலை செய்யும் ஊரிலேயே ரேஷன் பொருட்கள் கிடைக்க மத்திய அரசு இ-ஷ்ரம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 8 கோடி தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களின் விவரங்களை சரிபார்க்க அனைத்து மாநிலங்களுக்கும் சுப்ரீம் கோர்ட் 4 மாத காலம் அவகாசம் கொடுத்திருந்தது. பீகார், தெலங்கானா மாநிலங்களில் மட்டுமே பிற மாநில தொழிலாளர் விவரங்கள் சரிபார்த்து முடித்துள்ளனர். இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பல மாநிலங்களின் செயல்படாத தன்மையை கோர்ட் கண்டித்தது.