வரலாற்றுச்சிறப்பு தீர்ப்பு வழங்கிய CJI சந்திரசூட்: முழுவிவரம் Supreme Court Intervenes: IIT Dhanbad
வெறும் 17,000 ரூபாய் பீசை கட்ட முடியாமல் மதிப்புமிக்க ஐஐடி சீட்டை இழந்த ஏழை மாணவனுக்கு மறுவாழ்வு கொடுத்திருக்கிறது சுப்ரீம் கோர்ட். உத்தரப்பிரதேச மாநிலம், முசாபர்நகர் Muzaffarnagar மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவர் அதுல் குமார். வயது 18. தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். அவரது அப்பா ஒரு தொழிலாளி. அதுல்குமார் இரவு பகலாக படித்து ஐஐடி நுழைவுத்தேர்வை எழுதினார். ஐஐடி தன்பாத்தில் சீட் உறுதியானது. பிடெக் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படிக்க வாய்ப்பு கிடைத்தது. நாட்டின் உயரிய கல்வி நிறுவனமான ஐஐடியில் படிக்கப்போகிறோம் என அதுல்குமாரை குதூகலத்தில் மிதந்தார். ஆனால், கல்விக்கட்டணமான 17,500 ரூபாயை கட்ட அதுல் குமாரின் அப்பாவிடம் பணம் இல்லை. என்ன செய்வதென்று புரியாமல் நின்ற அதுல்குமாருக்கு உதவ ஊரார் முன்வந்தனர். சொந்தங்கள், அக்கம் பக்கத்தினர் என எல்லாரும் அவரவர் பங்குக்கு கொஞ்சம் பணம் கொடுத்து உதவினர். ஜூன் 24ம்தேதி மாலை 5 மணிக்குள் பணத்தை செலுத்தவேண்டும் என ஐஐடி தன்பாத் கடிதம் அனுப்பியிருந்தது.