உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மேற்கு வங்க அரசை விளாசி எடுத்த சுப்ரீம் கோர்ட் | kolkata doctor case | Sanjay Roy | CBI

மேற்கு வங்க அரசை விளாசி எடுத்த சுப்ரீம் கோர்ட் | kolkata doctor case | Sanjay Roy | CBI

கொல்கத்தா ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். ஆகஸ்ட் 9ம் தேதி நடந்த இந்த சம்பவம் மொத்த நாட்டையும் உலுக்கியது. பலாத்காரம் மற்றும் கொலையை செய்ததாக சஞ்சய் ராய் என்பவன் கைது செய்யப்பட்டான். இந்த வழக்கில் மேற்கு வங்க போலீசின் செயல்பாடு மந்தமாக இருந்ததால் சிபிஐக்கு விசாரணை மாற்றப்பட்டது. பெண் டாக்டர் கொல்லப்பட்டதை கண்டித்து டாக்டர்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். சிபிஐ விசாரணை நடந்து வரும் நிலையில் சுப்ரீம் கோர்ட் தாமாக முன் வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் முன் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. பெண் டாக்டர் கொலை வழக்கில் சிபிஐ தரப்பில் அறிக்கை சமர்பிக்கப்பட்டது. அதில் டாக்டர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நேரம், அவரது உடலை பார்க்க விடாமல் போலீஸ் தடுத்தது உள்ளிட்ட தகவல்கள் இருந்தது. அறிக்கையை படித்து பார்த்த தலைமை நீதிபதி சந்திரசூட் மேற்கு வங்க அரசுக்கு சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளனர். இறப்பு சான்றிதழ் தரப்பட்ட நேரத்துக்கும், போலீஸ் வழக்கு பதிவு செய்த நேரத்துக்கும் வித்தியாசம் உள்ளது. வழக்கமான நடைமுறைகளை எதுவும் பின்பற்றாமல் உடலை பிரேத பரிசோதனை செய்தது ஏன்? பிரேத பரிசோதனை செய்வதற்கான ஆவணம் இல்லாமல் ஒரு டாக்டர் உடற்கூராய்வு செய்யக்கூடாது என விதி உள்ளது. அப்படி இருக்கையில் பெண் டாக்டர் உடலை எந்த அடைப்படையில் பிரேத பரிசோதனை செய்தார்கள்? என நீதிபதி சந்திரசூட் கேட்டார். சிபிஐ தரப்பில் ஆஜரான வக்கீல் துஷார் மேக்தா இதற்கு விளக்கம் அளித்தார். தடயவியல் பரிசோதனையில் ஆதாரங்களை சேகரிக்க சவால்களை எதிர்கொண்டதாக கூறினார். ரத்த மாதிரிகள் 4 டிகிரி செல்சியஸில் வெப்பநிலையில் பாதுகாத்து வைக்கப்படவில்லை. இதுபோன்று ஆதாரங்களை கையாள்வதில் மேற்குவங்க அரசு அலட்சியம் காட்டியுள்ளதாக குறிப்பிட்டார். தடயவியல் மாதிரிகளை டில்லி எய்ம்ஸ்க்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம் என கூறினார்.

செப் 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி