வாயை கொடுத்து வாங்கி கட்டிய சிபிஎம் எம்.பி | suresh gopi | bjp m.p | rajyasabha | empuraan movie |
பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த லூசிஃபர் படம் 2019ல் வெளியானது. அதன் 2ம் பாகமாக தற்போது எம்புரான் படம் உருவாகியுள்ளது. மார்ச் 27ல் இப்படம் தியேட்டர்களில் ரிலீசானது. பொலிட்டிக்கல் த்ரில்லர் கதை களத்தில் உருவாகியுள்ள எம்புரான் படத்தில் காங்கிரஸ் , பாஜ , மார்க்ஸிய காட்சிகளை குறிப்பிட்டு விமர்சிக்கும் விதமாக நிறைய காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 2002 குஜராத்தில் நடந்த இந்து முஸ்லிம் கலவரமும் படத்தின் மைய கதையாக இடம்பெற்றுள்ளது. இந்து மதத்தை சேர்ந்தவர்கள் இஸ்லாமிய கர்ப்பிணியை பாலியல் வன்கொடுமை செய்யும் காட்சிகளுக்கு இந்துத்துவ அமைப்புகள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் சர்ச்சைக்குரிய காட்சிகளை எம்புரான் படக்குழு நீக்கியது. நீக்கப்பட்ட காட்சிகளுடன் எம்.பி சுரேஷ் கோபிக்கு தெரிவித்த நன்றியையும் படக்குழுவினர் நீக்கி உள்ளனர். இந்நிலையில் எம்புரான் பட சர்ச்சை ராஜ்யசபா வரை சென்றுள்ளது. மத்திய இணை அமைச்சரும் பாஜ எம்.பியுமான சுரேஷ் கோபி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி ஜான் பிரிட்டாஸ் இடையே எம்புரான் படத்தை மையமாக வைத்து காரசாரமான விவாதம் அரங்கேறியது.