/ தினமலர் டிவி
/ பொது
/ தமிழ் பேசும் பெண்ணுக்கு ஓட்டுச்சாவடியில் நடந்த சோகம் tamil speaking woman complaint ballot fraud po
தமிழ் பேசும் பெண்ணுக்கு ஓட்டுச்சாவடியில் நடந்த சோகம் tamil speaking woman complaint ballot fraud po
மகாராஷ்ட்ராவில் அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்தது. ஒரு சில ஓட்டுச்சாவடிகளில் பார்க்கிங் வசதி இல்லாதது போன்ற சின்னச்சின்ன பிரச்னைகள் ஏற்பட்டன. சில ஓட்டுச்சாவடிகளில் ஓட்டு போட நீண்ட தூரம் நடக்க வேண்டியிருந்ததால் மூத்த குடிமக்கள் அவதிப்பட்டனர். சில ஓட்டுச்சாவடிகளில் சில வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டிருந்தன. நவி மும்பையில் ஆசையாக ஓட்டுப்போட சென்ற ஸ்ரீலஷ்மி பட்டீம் என்ற பெண்ணுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. அவர் ஓட்டை யாரோ போட்டு விட்டுச் சென்றிருந்தார்கள்.
நவ 20, 2024