1,700 பேருக்கு திரும்ப திரும்ப கிடைத்த நிதியுதவி
தமிழகத்தில் 2020ல் கொரோனா பாதிப்பு தீவிரமாக இருந்ததால் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. கட்டுமான தொழிலாளரகள் வேலை இழந்திருந்தனர். அவர்களுக்கு 2000 முதல் 3000 ரூபாய் வீதம் 12.14 லட்சம் தொழிலாளர்களுக்கு 248.29 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதில் 10.50 லட்சம் பேருக்கு நிதியுதவி கிடைத்தது. அரசின் தரவுகளில் உள்ள சிக்கல்கள் காரணமாக 1.64 லட்சம் தொழிலாளர்களுக்கு நிதியுதவி கிடைக்கவில்லை. அத்துடன், 1729 பேருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை நிதியுதவி வழங்கியதால் 33.31 லட்சம் ரூபாய் கூடுதலாக செலவாகி இருப்பது தணிக்கை ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஜூன் 30, 2024