உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நண்பனை தீர்த்து கட்டி போலீசில் சரணடைந்த வாலிபர்கள் | Taramani Police | Investigation | Crime

நண்பனை தீர்த்து கட்டி போலீசில் சரணடைந்த வாலிபர்கள் | Taramani Police | Investigation | Crime

சென்னை தரமணியை சேர்ந்தவர் அஷ்வின், வயது 25. தரமணி ஏரிக்கரை பகுதியை சேர்ந்த மோகன், சங்கர் மற்றும் மடிப்பாக்கம் பரத் அஷ்வினின் நண்பர்கள். இன்று மூவரும் அஸ்வினை மது அருந்த அழைத்துள்ளனர். அஷ்வின் மறுப்பு தெரிவித்ததால் வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றி அழைத்து சென்றுள்ளனர். மது வாங்கி கொண்டு தரமணி ரயில் நிலையம் அருகே உள்ள காலி மைதானத்திற்கு சென்று 4 பேரும் மது அருந்தியுள்ளனர். பின் திட்டம் தீட்டியது போல மூவரும் சேர்ந்து அஷ்வினை கத்தியால் சரமாரியாக குத்தி படுகொலை செய்துள்ளனர். ரயில்வே ஸ்டேஷன் அருகே வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

மே 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ