உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மக்கள் எதிர்த்தால் டாஸ்மாக் கடையை மாற்றுங்கள்: ஐகோர்ட் உத்தரவு | Tasmac case | High court | Shop ch

மக்கள் எதிர்த்தால் டாஸ்மாக் கடையை மாற்றுங்கள்: ஐகோர்ட் உத்தரவு | Tasmac case | High court | Shop ch

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி காமன்தொட்டி கிராமத்தை சேர்ந்த சுந்தர் என்பவர் டாஸ்மாக் முன் போலி மதுபானம் விற்றதாக தனக்கு எதிராக பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். டாஸ்மாக் நடத்த வாடகைக்கு கொடுத்த கடையை, குத்தகை காலம் முடிந்தும் காலி செய்யாதது குறித்து கலெக்டரிடம் புகார் செய்ததால் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாக மனுவில் கூறி இருந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட், தமிழகம் முழுவதும் குத்தகை காலம் முடிந்தும் கடைகளை காலி செய்யாமல் நடத்தப்படும் டாஸ்மாக் கடைகள் பற்றிய அறிக்கையுடன் நேரில் ஆஜராகும்படி டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் நேரில் ஆஜராகினார்.

நவ 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை