தெலங்கானா சுரங்கத்தில் இறுதிக்கட்டத்தை எட்டிய மீட்பு பணி | Telangana tunnel | 8 Workers trapped | Re
தெலங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது இதற்காக பாறையை குடைந்து சுரங்கம் தோண்டும் பணிகள் நடக்கிறது. பிப்ரவரி 22ம் தேதி பணிகள் நடந்தபோது சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்தது. 2 பொறியாளர்கள், 2 ஆப்ரேட்டர்கள், 4 தொழிலாளர்கள் என மொத்தம் 8 பேர் சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டனர். உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த அந்த தொழிலாளர்களை மீட்கும் பணிகள் துரித கதியில் தொடங்கியது. தேசிய பேரிடர் மீட்புப் படை, ராணுவம், கடற்படை வீரர்கள் தீவிர முயற்சியில் இறங்கினர். ஆனால், நீர்க்கசிவு, இடிபாடுகள், சகதி போன்றவற்றால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. 30 அடி உயரம் கொண்ட சுரங்கத்தில் 25 அடி வரை சகதி நிரம்பி கிடந்தது. மீட்புப்படையினர் நீரை அகற்றி சுரங்கத்துக்குள் சென்றனர். ஒரு வாரமாக மீட்புப் பணி நடந்து வரும் நிலையில், சுரங்க நிலச்சரிவில் சிக்கிய 8 பேரும் பலியானதாக தகவல் வெளியானது. அதிநவீநன சிரிய ரக டிரோன் மூலம் உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இந்த தகவலை தெலங்கானா அரசு மறுத்துள்ளது. ஒரு வாரத்தை கடந்து நடக்கும் மீட்பு பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாகவும் கூறியுள்ளது. ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய் சுரங்கப்பாதை அருகே ஆம்புலன்ஸ்கள் தயாராக நிறுத்தப்பட்டுள்ளன.