தென்காசி ஆதரவற்றோர் இல்லத்தில் நடந்தது என்ன? | Tenkasi | Orphanage
தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் ஆதரவற்றோர் இல்லம் உள்ளது. இங்கு 11 பேர் தங்கி இருந்தனர். நேற்று இரவு ரசம், முட்டைகோஸ் பொரியல் சாப்பிட்டனர். சாப்பிட்டு முடித்த சிறிது நேரத்தில் அனைவருக்கும் உடல் உபாதை ஏற்பட்டது. வயிற்று வலி, வாந்தி, வயிற்று போக்கால் துடித்து போனார்கள். 11 பேரும் தென்காசி அரசு ஆஸ்பிடலில் சிகிச்சைக்காக அட்மிட் செய்யப்பட்டனர். இதில் சங்கர் கணேஷ், 48, முருகம்மாள்,45, அம்பிகா,40, ஆகிய 3 பேர் இறந்தனர். மேலும் 8 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இரவு வழங்கப்பட்ட உணவு கெட்டுப்போயிருக்கலாம் அல்லது உணவு விஷத்தன்மை கொண்டதாக இருந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக உணவுப் பாதுகாப்புத்துறை விசாரணையும் நடக்கிறது.