கலெக்டர் போட்ட தடையால் தென்காசி பக்தர்கள் கொதிப்பு Kaasi Viswanathar Temple, Tenkasi
தென்காசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நாளை காலை 9 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி, அரண்மனை போன்று அமைக்கப்பட்ட பிரமாண்டமான யாக சாலையில் 91 மகா குண்டங்கள் அமைக்கப்பட்டு 250 சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகிறது. 19 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதால் விழாவில் ஒன்றரை லட்சம் பக்தர்கள் திரண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 1500 போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு காலை முதல் இரவு வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. சிவ பக்தர்கள் பேரவை சார்பில் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் காலையில் டிபன், மதிய விருந்து என தடபுடல் ஏற்பாடுகள் நடக்கிறது. டன் கணக்கில் பலவித காய்கறிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. 300க்கு மேற்பட்டவர்கள் சமையல் பணியில் ஈடுபட்டுள்ளனர். விழா முன்னேற்பாடுகளை கலெக்டர் கமல் கிஷோர் ஆய்வு செய்தார். தெப்பக்குளம் அருகே மட்டும் அன்ன தானம் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, கலெக்டர் கமல் கிேஷார் கூறினார். பைட் கமல் கிஷோர் தென்காசி கலெக்டர் பல அமைப்பினர் அன்னதானம் வழங்க முன்வரும்போது அதற்கு மாவட்ட நிர்வாகம் தடை போட்டுள்ளதால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.