கொள்ளையர்களை கூண்டோடு தூக்கியது தனிப்படை | Theft at ASP house | 5 Arrest | Tirupathur
ASP வீட்டிலேயே கைவரிசை காட்டிய கொள்ளை கும்பல் திருப்பத்தூர் மாவட்டம் சின்னபள்ளிகுப்பம் எம்ஜிஆர் நகரில் வசிப்பவர் மத்திய குற்றப் புலனாய்வுத்துறை ஏஎஸ்பி வெங்கடேசன். 7 ம் தேதி குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த போது மர்ம நபர்கள் இவரது வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, 2 லட்சம் ரூபாயை திருடி சென்றனர். அதே நாளில் கட்டவாரப்பள்ளியில் சண்முகம் என்பவரது வீட்டில் மிளகாய் பொடியை தூவி 5 பவுன் நகை, 3 லட்சம் ரூபாயை கொள்ளையடித்தனர். தனிப்படை போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடிவந்தனர். இவ்வழக்கில் சின்னபள்ளி குப்பத்தை சேர்ந்த சங்கர் என்பவர் பிடிபட்டார். அவரிடம் நடந்த விசாரணையில் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூரை சேர்ந்த சாந்தி, ஹரி கிருஷ்ணன், முத்துக்குமார், பிரபாகரன் ஆகியோருடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர்.