உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போலீஸ் டச் பண்ண முடியாத தாரா கேங்: வெளியான பின்னணி | Theft Gang | Chennai Omni Bus

போலீஸ் டச் பண்ண முடியாத தாரா கேங்: வெளியான பின்னணி | Theft Gang | Chennai Omni Bus

பவாரியா பாணியில் தாரா கேங்! சென்னை பஸ்சில் நடந்தது என்ன? காட்டி கொடுத்த CCTV சென்னையில் இருந்து ஐதராபாத் நோக்கி தனியார் ஆம்னி பஸ் கடந்த பிப்ரவரி 9ம் தேதி கிளம்பியது. ஆந்திர மாநிலம் பாபட்லாவை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் அந்த பஸ்சில் பயணித்தார். தெலங்கானா மாநிலம் நல்கொண்டா அருகே தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் மதிய உணவு சாப்பிட பஸ் நிறுத்தப்பட்டது. வெங்கடேஷ் தன்னிடம் இருந்த 25 லட்சம் பண பையை பஸ்சில் வைத்துவிட்டு சாப்பிட சென்றார். சாப்பிட்டு வந்து பார்த்த போது பண பை இல்லை. பதறிப்போன அவர் அருகில் இருந்த போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். அங்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மத்திய பிரதேசத்தை சேர்ந்த தாரா கேங் கொள்ளை கும்பலின் கைவரிசை என்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து நல்கொண்டா எஸ்பி ஷரத் சந்திர பவார் இந்த கும்பலை பிடிக்க நான்கு தனிப்படை அமைத்தார். தனிப்படை போலீசார் மத்திய பிரதேச மாநிலம் ராலமண்டா மலை கிராமத்துக்கு சென்றனர். அங்கு பதுங்கி இருந்த கொள்ளை கும்பலை அடையாளம் கண்டு உள்ளூர் போலீஸ் உதவியுடன் ஒரு வாரம் தொடர்ந்து கண்காணித்தனர். கண்காணிப்பிற்கு பிறகு முக்கிய குற்றவாளியான முகமது அஷ்ரப் கானை கைது செய்து 25 லட்சம் பணம் ஒரு காரை மீட்டனர். இதில் தொடர்புடைய லைப்கான், முகமது யூசுப் கான், அக்ரம்கான் ஆகியோர் தலைமறைவான நிலையில் தேடி வருகின்றனர். தாரா கேங் கொள்ளை கும்பல் மீது நாடு முழுவதும் திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளது. வழக்கமாக இந்த கொள்ளை கும்பலை கண்டுபிடித்து அவர்கள் ஊருக்கு போலீசார் சென்றால் உள்ளூர் மக்கள் கைது செய்ய விட மாட்டார்கள். கொள்ளையடித்த பணத்தை திருப்பி கொடுத்து சமாதான வழிக்கு வந்து விடுவார்கள். இங்குள்ள அரசியல் பலம், உள்ளூர் செல்வாக்கு கொள்ளையர்களுக்கு சாதகமாக இருந்து வந்தது. முதல் முறையாக இந்த வழக்கில் போலீசார் அங்குள்ள உள்ளூர் போலீசார் உதவியுடன் கொள்ளை கும்பலை சேர்ந்த ஒருவனை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிப் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை