உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 1 மணி நேரம் போராடி மீட்பு; கதறி அழுத குடும்பம் | Thiruvarur | Nannilam River | Police Investigation

1 மணி நேரம் போராடி மீட்பு; கதறி அழுத குடும்பம் | Thiruvarur | Nannilam River | Police Investigation

ஆற்றில் மூழ்கி 4 இளைஞர்கள் பலி! என்ன நடந்தது? திருவாரூர் நன்னிலம் பகுதியில் காவிரியின் கிளை ஆறான புத்தாறு செல்கிறது. ஆற்றில் கனமழையின் காரணமாக சமீப நாட்களாக நீர்வரத்து அதிகமாக உள்ளது. இந்த சூழலில் கீழ்குடி தடுப்பணை பகுதியில் நான்கு இளைஞர்கள் இன்று குளிக்க சென்றுள்ளனர். மாலை நேரத்தில் குளித்த அவர்கள் திடீரென அலறி உள்ளனர். நான்கு பேரும் மூழ்குவதை பார்த்த அப்பகுதியினர் சிலர் காப்பாற்ற முயற்சி செய்தனர். அது தோல்வியில் முடிந்ததால் நன்னிலம் தீயணைப்பு வீரர்களுக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். ஆற்றில் ஒரு மணி நேரம் தேடி 4 பேரையும் சடலமாக மீட்டனர். சாலை ஓரத்தில் காரை நிறுத்திவிட்டு வந்த இவர்கள் வெளியூரை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என உள்ளூர்வாசிகள் கூறினர். உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரித்தனர். 4 பேரும் திருவாரூர் வில்லியநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர்கள். ஹரிகரன் வயது 30, ஜெயக்குமார் வயது 30, மணிகண்டன் வயது 30 , மணிவேல் வயது 28 என்பதும் தெரியவந்தது. மணிகண்டன் அரசு ஊழியராக பணியாற்றி வருகிறார். ஒரே நேரத்தில் நண்பர்கள் நான்கு பேறும் இறந்த சம்பவம் அவர்கள் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் குறித்து நன்னிலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

ஆக 11, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
ஆக 20, 2025 06:57

இப்பொழுதெல்லாம் ரீல்ஸ் மோகத்தில் மிகவும் ஆபத்தான இடங்களுக்குச் செல்வது அதிகரித்துள்ளது. நீச்சல் தெரியாமல் ஆற்றில் இறங்குவது ஆபத்தானது என்ற அடிப்படை அறிவு கூட இருப்பதில்லை. வெளியூர் ஆற்றில் எந்த இடத்தில் பாறை இருக்கிறது? எந்த இடத்தில் குழி இருக்கிறது? நீரோட்டம் எப்படி இருக்கிறது? என்று தெரியாத பொழுது இவர்கள் பாதுகாப்பில்லாமல் ஆற்றில் இறங்குவதை நினைத்தால் வேதனைதான் மிஞ்சுகிறது. எத்தனை பேர் இதுபோல் இறந்தாலும் இவன்களுக்கு புத்தி வருவதே இல்லை. பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு நல்ல புத்தியைச் சொல்லிக் கொடுப்பதே இல்லை. ஏனென்றால் அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ