திண்டுக்கல்லில் பதுங்கி இருந்த 4 பேர் கைது! | Thoothukudi | Police Investigation | Salem
துாத்துகுடி, பெரியார் நகரை சேர்ந்தவர் மதன்குமார் வயது 28. சென்ற ஏப்ரலில் கப்பல் மாலுமி மரடோனாவை கொலை செய்த வழக்கில் கைதானார். சேலம் அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட கோர்ட் உத்தரவிட்டு நிபந்தனை ஜாமினில் வந்திருந்தார். நேற்று முன்தினம் காலை கையெழுத்து போட்டு விட்டு மனைவியுடன் ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது ஆறு பேர் கும்பல் மதன்குமாரின் கையை தனியாக வெட்டி மேஜையில் வைத்து விட்டு, சரமாரியாக தலை, கழுத்து, வயிறு உட்பட 20 இடங்களில் வெட்டினர். மதன்குமார் துடிதுடித்து இறந்தார். அஸ்தம்பட்டி போலீசார் விசாரித்தனர். தனிப்படை போலீசார் திண்டுக்கல் சென்று அங்கு பதுங்கி இருந்த துாத்துக்குடியை சேர்ந்த ஹரிபிரசாத், ஜெயசூர்யா, அந்தோணி, சந்தோஷ் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது: முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளது. 2019ல் டாஸ்மாக் கடையில் நடந்த தகராறில் குட்டி என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மதன்குமார் கைதாகி ஜாமினில் வந்துள்ளார்.