/ தினமலர் டிவி
/ பொது
/ யானை தாக்கி இறந்த 2 பேர் சொந்த ஊரில் சோகம் Tiruchendur temple elephant attacked Mahout and man die
யானை தாக்கி இறந்த 2 பேர் சொந்த ஊரில் சோகம் Tiruchendur temple elephant attacked Mahout and man die
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானைக்கு வயது 26. உதயகுமார் 45 என்பவர் யானைப்பாகனாக பணியாற்றி வந்தார். உதயகுமாரின் பெரியப்பா மகன் சிசுபாலன் வயது 59 நேற்று தூத்துக்குடிக்கு வந்தார். உதயகுமாரை பார்க்கச் சென்ற அவர், யானை அருகே நின்று செல்பி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, யானையின் உடலில் தட்டியதாக கூறப்படுகிறது. கோபமான யானை சிசுபாலனை தும்பிக்கையால் தாக்கியது. காலால் மிதித்தது. அதிர்ச்சியடைந்த பாகன் உதயகுமார் ஓடிப்போய் சிசுபாலனை காப்பாற்ற முயன்றார்.
நவ 19, 2024