உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 6 பேர் கைது! வெளி வந்த உண்மை காரணம் | Tiruchi | Tiruchi Crime | Investigation

6 பேர் கைது! வெளி வந்த உண்மை காரணம் | Tiruchi | Tiruchi Crime | Investigation

திருச்சி சமயபுரத்தை சேர்ந்தவர் ராகுல் அவரது உறவினர் வழி சகோதரர் விஷால் இருவருக்கும் வயது 17. தீபாவளி அன்று இருவரும் நண்பரை பார்க்க தனியார் மருத்துவமனைக்கு சென்று திரும்பி உள்ளனர். அப்போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஆறு பேர் சேர்ந்து ராகுல் மற்றும் விஷாலை தாக்கியுள்ளனர். இதில் இருவரும் இறந்தனர். ராகுலின் சகோதரர் அளித்த புகாரில் சமயபுரம் போலீசார் விசாரித்தனர். சிசிடிவி, மற்றும் சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் கெனி வின்ஸ், கரனிஷன், சரவணன், சிவநேசன், கிருபாகரன் மற்றும் ஹரிஹரன் ஆகிய ஆறு பேரை கைது செய்தனர். ராகுலுக்கும், குற்றவாளி கெனிக்கும் இடையே ஒரே சிறுமியை காதலித்தது தொடர்பான தகராறில் இந்த இரட்டைக் கொலை நடந்தது தெரிய வந்தது. இன்று கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை பறிமுதல் செய்ய சிவநேசனை அழைத்து சென்றனர். அப்போது போலீசாரை நோக்கி கற்களை வீசி தாக்கி, மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை கொண்டு தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. தாக்குதலை தடுக்கும் வகையில் இன்ஸ்பெக்டர் குணசேகரன் துப்பாக்கியால் சுட்டுள்ளார். சிவநேசனின் இடது முழங்காலில் குண்டு பாய்ந்தது. காயமடைந்த போலீஸ் மற்றும் சிவநேசன் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். #Tiruchi | #TiruchiCrime | #Investigation | #Samayapuram | #SamayapuramPolice

நவ 11, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி