உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வேறுமாநில தொழிலாளர்களால் திருப்பூருக்கு புதுவித ஆபத்து! Tiruppur Garments Work | North Indian Labou

வேறுமாநில தொழிலாளர்களால் திருப்பூருக்கு புதுவித ஆபத்து! Tiruppur Garments Work | North Indian Labou

திருப்பூரில் உள்நாட்டு பின்னலாடை வர்த்தகம் ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நடக்கிறது. இது இல்லாமல் ஏற்றுமதி வர்த்தகம் தனியாக நடக்கிறது. திருப்பூருக்கு வேலைவாய்ப்பு தேடி வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் அதிகளவில் வருகின்றனர். இங்குள்ள நிட்டிங், டையிங், டெய்லரிங், பிரின்டிங் உள்ளிட்ட நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். தற்போது மின் கட்டண உயர்வு, வரிச்சுமை உள்ளிட்டவையால் பின்னலாடை தொழில் தள்ளாடி வருகிறது. வேறு மாநிலத்தில் இருந்து வரும் தொழிலாளர்கள், இங்கு தொழிலை கற்று கொண்டு சென்று தங்கள் மாநிலத்தில் பின்னலாடை நிறுவனத்தை துவங்குகின்றனர். அங்கு வரி, மின்கட்டணம் தமிழகத்தை விட குறைவாக உள்ளது. இதனால் திருப்பூரை விட குறைந்த விலைக்கு பின்னலாடையை உற்பத்தி செய்து, உள்நாட்டு வணிகர்களை ஈர்க்கின்றனர். 15 ஆண்டுகளுக்கு முன் கேரள மக்கள் அதிக அளவு திருப்பூருக்கு பணிக்காக வந்தனர். அவர்கள் தொழிலை கற்று கொண்டு அங்கு சென்று நிறுவனத்தை ஆரம்பித்து விட்டனர். கேரளாவில் குடிசை தொழில் போல பின்னலாடை உற்பத்தி நடக்கிறது. தற்போது யாரும் இங்கு பணிக்காக வருவதில்லை. அதே போல கேரளாவில் இருந்து வரும் ஆர்டர்களும் நின்று போய் விட்டன.

நவ 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி