உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மது போதையில் விபத்து போல் நாடகம்! tirupur accident | samalapuram | dmk chairman arrest

மது போதையில் விபத்து போல் நாடகம்! tirupur accident | samalapuram | dmk chairman arrest

திட்டமிட்டு கார் ஏற்றி கொன்ற திமுக சேர்மன் வெளியான உண்மை! திருப்பூர் கருக்கம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி வயது, 57. இவர் நேற்று மதியம் பைக்கில் சென்று கொண்டிருந்தார். கருக்கம்பாளையம் பள்ளி அருகே வந்த போது வேகமாக வந்த கார் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்றது. பழனிசாமி தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்தார். பரிசோதித்தபோது சம்பவ இடத்திலேயே இறந்தது தெரிந்தது. மங்கலம் போலீசார் விசாரித்தனர். விபத்தை ஏற்படுத்தி தப்பி சென்றது, திமுகவை சேர்ந்த சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிசாமி என்பது உறுதியானது. அவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். முதல் கட்ட விசாரணையில் மது போதையில் விபத்து நடந்ததாக சேர்மன் கூறினார். சந்தேகம் ஏற்படவே போலீசார் விசாரணயை துரிதப்படுத்தினர். அதிர்ச்சிக்குரிய தகவல் வெளியானது. இறந்த பழனிசாமி, மக்களுக்கு பயன்பாடில்லாத தனியார் இடத்தில் போடப்பட்ட ரோடு தொடர்பாக கலெக்டரிடம் பேரூராட்சி நிர்வாகம் மீது புகார் கொடுத்துள்ளார். சேர்மன் விநாயகா பழனிசாமிக்கும், இறந்து போன பழனிசாமிக்கும் இது தொடர்பாக முன் விரோதம் இருந்துள்ளது.
 இதன் காரணமாகவே மது போதையில் இருந்த சேர்மன், காரை ஏற்றி அவரை கொன்றுள்ளார். கொலை வழக்கு பதிந்த மங்கலம் போலீசார், பேரூராட்சி சேர்மனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செப் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை